Enable Javscript for better performance
மூதாட்டி கொலை: இருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    சென்னை திருவல்லிக்கேணியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று நகைகளை கொள்ளையடித்ததாக உறவினர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

    இது குறித்த விவரம்:

    திருவல்லிக்கேணி ஜாம் பஜார் தேவராஜ் முதலித் தெருவைச் சேர்ந்தவர் கனி முகம்மது மனைவி மகருன்னிஷா. கடந்த 24-ம் தேதி மகருன்னிஷா, படுக்கை அறையில் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். ஜாம் பஜார் போலீஸார் விசாரணை நடத்தினர்.

     இந்த வீட்டின் அருகே இருந்த கடைகளில் பொருத்தப்பட கேமிராக்களில் பதிவான காட்சிகளை போலீஸார் பறிமுதல் செய்து, விசாரித்தனர். விசாரணையில் அதேப் பகுதியைச் சேர்ந்த கனியின் உறவினர் நூர் முகம்மது மகன் சபி முகம்மது (29), அவரது கூட்டாளி ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த அப்துல் ஹமீது பாலி (27) ஆகிய இருவரும்தான் சேர்ந்து மகருன்னிஷாவை கொலை செய்து, நகை பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

     இதையடுத்து போலீஸார் தலைமறைவாக இருந்த இருவரையும் திங்கள்கிழமை கைது செய்தனர். அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம், நகை பறிமுதல் செய்யப்பட்டது.

    கைது செய்யப்பட்ட சபி, இங்கிலாந்து பட்ட மேற்படிப்பு படித்திருப்பதும், சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் மகருன்னிஷாவை கொலை செய்து நகை, பணத்தை கொள்ளையடித்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai