சுடச்சுட

  

  நுங்கம்பாக்கத்தில் தீ விபத்து: 120 குடிசைகள் எரிந்து நாசம்

  By dn  |   Published on : 07th June 2014 04:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சென்னை நுங்கம்பாக்கத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 6) ஏற்பட்ட தீ விபத்தில் 120 குடிசைகள் எரிந்து நாசமாகின.

  சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பாநகரில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு அருகே சுமார் 150 குடிசை வீடுகள் உள்ளன.

  இதில் ஒரு வீட்டில் வெள்ளிக்கிழமை அதிகாலை 3.50 மணியளவில் திடீரென தீப் பிடித்தது. தகவலறிந்ததும் நுங்கம்பாக்கம் தீயணைப்பு நிலைய வீரர்கள் அந்த இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாததால் கிண்டி, எழும்பூர், அம்பத்தூர், தேனாம்பேட்டை, தியாகராயநகர் ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டன.

  சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீயை முழுமையாக அணைத்தன. இந்த விபத்தில் 120 குடிசை வீடுகள் எரிந்து நாசமாகியது.

  வீடுகளில் இருந்த டி.வி., மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட ரூ.10 லட்சம் மதிப்பு பொருள்களும் எரிந்து நாசமாகியது.

  இந்த விபத்துக்கு மின்கசிவு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai