Enable Javscript for better performance
ஏப்ரல் 30-இல் அஞ்சல் குறைதீர் முகாம்- Dinamani

சுடச்சுட

    

    வட்டார அளவிலான அஞ்சல் குறைதீர் முகாம் ஏப்ரல் 30-ஆம் தேதி நடைபெறும் என தமிழக அஞ்சல் வட்டம் தெரிவித்துள்ளது.

    அஞ்சல் துறையின் "டாக் அதாலத்' அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலர் அலுவலகத்தில் ஏப்ரல் 30-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும். நுகர்வோர் தமது குறைகளை ஏப்ரல் 5-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். புகார்களை "ஆர்.சாந்தகுமார், துணை இயக்குநர், தலைமை அஞ்சல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வட்டம், சென்னை - 600 002' என்ற முகவரிக்கு அனுப்பலாம். அதேபோல் நுகர்வோர்கள் தங்களது குறைகளை ஹக்ல்ஞ்ற்ய்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம் என்ற மின்னஞ்சலுக்கு "டாக் அதாலத்' என்று குறியிட்டும் அனுப்பலாம்

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai