Enable Javscript for better performance
கோயம்பேடு பஸ் நிலையத்தில் \\\"மாதிரி\\\' மெட்ரோ ரயில்- Dinamani

சுடச்சுட

    
    metro_train

    கோயம்பேடு பஸ் நிலையத்தின் நுழைவு வாயிலில் கண்ணாடிக் கூண்டுக்குள் "மாதிரி' மெட்ரோ ரயில் பெட்டிகள் திங்கள்கிழமை முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    இதை கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு வரும் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்துச் செல்வதோடு, புகைப்படங்களும் எடுத்துக் கொள்கின்றனர்.

    சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ரூ.14,600 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த மாதம் முதல் கோயம்பேடு-அசோக் நகர் இடையே நடத்தப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்தை பொதுமக்கள் ஆர்வமுடன் ரசித்து வருகின்றனர். எனவே, பொதுமக்களின் ஆர்வத்தை கருத்தில் கொண்டு மெட்ரோ ரயிலின் மாதிரியை கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு அதிகாரிகள் கொண்டு வந்தனர்.

    சென்னை மெட்ரோ ரயிலுக்காக மொத்தம் 4 பெட்டிகளைக் கொண்ட 42 ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பிரேசில் நாட்டை சேர்ந்த "அல்ஸ்டாம் என்ற தனியார் நிறுவனம் மெட்ரோ ரயில் பெட்டிகளை தயாரித்து வருகிறது.

    பிரேசில் நாட்டில் இருந்து இதுவரை 5 மெட்ரோ ரயில்கள் கப்பல் மூலம் சென்னைக்கு வந்துள்ளன.

    இன்னும் 4 ரயில்கள் விரைவில் வர உள்ளன. மீதமுள்ள 33 ரயில்கள் ஆந்திர மாநிலம் தடா அருகே உள்ள ஸ்ரீசிட்டியில் தயாரிக்கப்படுகின்றன. முதல் ரயில் கடந்த சில நாள்களுக்கு முன் தடாவில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.

    இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் அதிகாரி கூறியது: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் இதற்கான விழா எதுவும் எடுக்கப்படாமல், பெயரளவிற்கு திறந்து வைக்கப்பட்டது.

    திட்டமிட்டபடி வரும் அக்டோபர் மாதம் முதல் கோயம்பேடு-ஆலந்தூர் இடையே ரயில் போக்குவரத்தைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான அனைத்து ரயில்களும் அடுத்த மாதத்துக்குள் பிரேசில் நாட்டில் இருந்து கப்பல் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட உள்ளன.

    இப்போது கோயம்பேடு முதல் அசோக்நகர் வரை ஒரு வழித்தடத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    ஓரிரு நாள்களில் இரண்டு வழித்தடத்திலும் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளன. இதேபோல் ஷெனாய் நகர்-அண்ணாநகர் இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணியும் நிறைவடைந்துள்ளது. உயர்த்தப்பட்ட பாதையில் விரைவில் தண்டவாளப் பணிகள் அமைக்கும் பணி நிறைவடைய உள்ளது.

    பிரேசில் நாட்டில் இருந்து 6 ரயில்களும், ஸ்ரீ சிட்டியில் இருந்து ஒரு ரயிலும் என மொத்தம் 7 ரயில்கள் கோயம்பேடு பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ளன. இது தவிர இரண்டு மெட்ரோ ரயில் பெட்டிகள் வரும் 29-ஆம் தேதி கொண்டு வரப்பட உள்ளன என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai