Enable Javscript for better performance
சிகிச்சை முடிந்தது: சிறையில் பன்னா இஸ்மாயில்- Dinamani

சுடச்சுட

    

    சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை முடிந்ததைத் தொடர்ந்து பன்னா இஸ்மாயில் வேலூர் மத்திய சிறைக்கு புதன்கிழமை (மார்ச் 26) கொண்டு செல்லப்பட்டார்.

    இந்து இயக்கத் தலைவர்களின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பன்னா இஸ்மாயில், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    போலீஸார் கைது செய்தபோது ஏற்பட்ட மோதலில், துப்பாக்கி குண்டு பாய்ந்த பன்னா இஸ்மாயிலுக்கு ஏற்கெனவே அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.

    சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு, அறுவைச் சிகிச்சை செய்த இடத்தில் வயிற்று வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மார்ச் 13-ஆம் தேதி கொண்டு வரப்பட்டார்.

    மார்ச் 17-ஆம் தேதி அவருக்கு மீண்டும் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பாதுகாப்பு காரணங்கள் கருதி அவர் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே வைத்து கண்காணிக்கப்பட்டார்.

    பன்னா இஸ்மாயிலின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இருந்து அவர் புதன்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    அவரை மீண்டும் வேலூர் மத்திய சிறைக்கு போலிஸார் கொண்டு சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai