Enable Javscript for better performance
சென்னையில் 1.11 லட்சம் புதிய வாக்காளர்கள் - Dinamani

சுடச்சுட

    

    சென்னை மாவட்டத்திலுள்ள 16 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 1 லட்சத்து 11 ஆயிரம் வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    தமிழகத்தில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் கடந்த ஜனவரி 10-ஆம் தேதி வெளியிடப்பட்டது. பட்டியலில் புதிய வாக்காளர்கள் சேர்த்தல், பெயர் நீக்கம், பிழைகள் திருத்தம், முகவரி மாற்றம் தொடர்பான விண்ணப்பங்கள் பெறப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    அதன்படி ஜனவரி 10-ஆம் தேதி முதல் மார்ச் 25-ஆம் தேதி வரை, சென்னை மாவட்டத்துக்குள்பட்ட 16 சட்டப் பேரவைத் தொகுதிகளில் இருந்து புதிய வாக்காளர்களாக சேர்ப்பதற்கு மொத்தம் 1 லட்சத்து 37 ஆயிரத்து 843 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவற்றில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 683 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 3,405 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என்றும் 22 ஆயிரத்து 755 பேரின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஏற்கெனவே வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் 36 லட்சத்து 36 ஆயிரத்து 199 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மார்ச் 25-ஆம் தேதி வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai