Enable Javscript for better performance
திருவான்மியூரில் சரத்குமார் பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    
    sarathkumar_canvas1

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் சென்னை கோட்டூர்புரத்தில் வியாழக்கிழமை (மார்ச் 27) பிரசாரம் செய்கிறார்.

    மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை புதன்கிழமை தொடங்கிய அவர், தென் சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் ஜெயவர்தனை ஆதரித்து திருவான்மியூர் மார்க்கெட் பகுதியில் பிரசாரம் செய்தார்.

    கோட்டூர்புரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் டாக்டர் ஜெயவர்தனை ஆதரித்து வியாழக்கிழமை காலை 10 மணிக்கு பேசுகிறார். பின்னர், சைதாப்பேட்டை ஆடுதொட்டி, எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட், சின்மயா நகர் பாலம், அமைந்தகரை புல்லாரெட்டி அவென்யூ, மத்திய சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.ஆர். விஜயகுமாரை ஆதரித்து வில்லிவாக்கம் பஸ் நிலையம், ஐ.சி.எப். காந்தி நகர், அயனாவரம் மார்க்கெட், புரசைவாக்கம், தானா தெரு, ஓட்டேரி பிரிக்ளின் சாலை, சூளை தபால் நிலையம், சூளைமேடு காந்தி சிலை ஆகிய இடங்களில் சரத்குமார் பிரசாரம் செய்ய இருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai