Enable Javscript for better performance
பிரிட்டன் விசா: விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 10 % குறைவு- Dinamani

சுடச்சுட

    

    பிரிட்டன் விசா: விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 10 % குறைவு

    By dn  |   Published on : 27th March 2014 02:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் இருந்து கடந்த ஆண்டு பிரிட்டன் விசாவுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 10 சதவீதம் குறைந்துள்ளது என சென்னைக்கான பிரிட்டிஷ் துணைத் துôதரக அதிகாரி பாரத் ஜோஷி கூறினார்.

    சென்னை கீழ்ப்பாக்கத்தில் இருந்து எழும்பூர் எத்திராஜ் சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள இங்கிலாந்து விசா விண்ணப்ப மையத்தில் புதன்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    சென்னையில் கடந்த ஆண்டு பெறப்பட்ட 1.10 லட்சம் விண்ணப்பங்கள் உள்பட இந்தியாவில் இருந்து பிரிட்டன் விசாவுக்காக மொத்தம் 4 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

    இந்த எண்ணிக்கை 2012-ஆம் ஆண்டை ஒப்பிடும்போது இந்திய அளவில் 20 சதவீதமும் தமிழக அளவில் 10 சதவீதமும் குறைவு.

    இதற்கு குடியுரிமை நெறிமுறைகளை கடுமையாக்கியது, உயர்கல்வி நிறுவனங்களின் தரத்தை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கான விசா வழங்குவதில் கடைப்பிடிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் போன்றவை முக்கியக் காரணங்களாகும். இந்தியாவில் கடந்த ஆண்டு, பிரிட்டன் விசாவுக்கான மாணவர்களின் விண்ணப்பங்கள் குறைந்தபோதிலும், வணிக நோக்கங்களுக்கான விசாவுக்கு விண்ணப்பித்தவர்களால் ஒட்டுமொத்த விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையில் 5 சதவீதம் அதிகரித்தது.

    உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு பிரிட்டன் அரசு ரூ.10 கோடி கல்வி உதவித்தொகை வழங்குகிறது.

    இது போன்ற நடவடிக்கைகளால் உயர்கல்விக்காக இங்கிலாந்து செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றார் அவர்.

    எழும்பூர், இங்கிலாந்து விசா விண்ணப்ப மையத்தில் வார நாள்களில் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை விசா விண்ணப்பங்கள் பெறப்படும். இதே நேரத்தில் விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் பாஸ்போர்ட்டுகள் திரும்ப தரப்படும் என பிரிட்டன் துணை தூதரக அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai