Enable Javscript for better performance
மார்பகப் புற்று நோய்: விழிப்புணர்வே சிகிச்சையின் அடிப்படை- Dinamani

சுடச்சுட

    

    மார்பகப் புற்று நோய்: விழிப்புணர்வே சிகிச்சையின் அடிப்படை

    By dn  |   Published on : 27th March 2014 02:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    miot

    மார்பகப் புற்று நோய் குறித்து பெண்கள் விழிப்புணர்வுடன் இருப்பதுதான் சிகிச்சையின் அடிப்படையாகும் என்று மியாட் மருத்துவமனையின் இணை நிர்வாக இயக்குநர் டாக்டர் பிருத்வி மோகன்தாஸ் கூறினார்.

    மியாட் மருத்துவமனையில் "மார்பக நலன் காத்தல்' என்ற தலைப்பில் பெண்களின் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதன்கிழமை நடைபெற்ற ஓவியம் வரைதல் மற்றும் ஜப்பானிய தற்காப்புக் கலை விளக்க நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

    ""உலக அளவில் 8 பெண்களில் ஒருவருக்கு மார்பகப் புற்று நோய் பாதிப்பு ஏற்படுகிறது. எனினும் மார்பக சுய பரிசோதனை உள்ளிட்டவை மூலம் மார்பகப் புற்று நோய் பாதிப்பை முன்கூட்டியே பெண்கள் கண்டறிந்து ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டால் முழுமையாக குணம் அடைய முடியும். இதற்காக பிரத்யேக மார்பக பரிசோதனைக்கு மியாட் மருத்துவமனை ஏற்பாடு செய்துள்ளது.

    ஏப்ரல் 13-ல் விழிப்புணர்வு ஓட்டம்: மார்பகப் புற்று நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த "பிங்க்கத்தான்' என்ற 10 கிலோமீட்டர் தொலைவு ஓட்டத்துக்கும் மியாட் மருத்துவமனை ஏற்பாடு செய்துள்ளது. இந்த விழிப்புணர்வு ஓட்டம் சென்னையில் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி நடைபெறுகிறது.

    இதில் 2,000-த்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொள்ள உள்ளனர். விழிப்புணர்வு ஓட்டம் தொடர்பான விவரங்களைஜ்ஜ்ஜ்.ல்ண்ய்ந்ஹற்ட்ர்ய்.ண்ய் என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்'' என்றார் டாக்டர் பிருத்வி மோகன்தாஸ்.

    முன்னதாக மார்பகப் புற்று நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஓவியங்களை பெண்கள் வரைந்தனர். இந்த நிகழ்ச்சியில் "பிங்கத்தான்' விழிப்புணர்வு ஓட்ட நிகழ்ச்சியின் தூதரும் இயக்குநருமான மிலித் சோமன், மியாட் மருத்துவமனையின் தலைவர் மல்லிகா மோகன்தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai