Enable Javscript for better performance
வீட்டில் தனியாக இருந்த பெண் நகைக்காக கொலை: இளைஞர் கைது- Dinamani

சுடச்சுட

    

    வீட்டில் தனியாக இருந்த பெண் நகைக்காக கொலை: இளைஞர் கைது

    By dn  |   Published on : 27th March 2014 02:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னை திரு.வி.க.நகரில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணைக் கொன்று நகையைக் கொள்ளையடித்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

    திரு.வி.க.நகரைச் சேர்ந்த ராமச்சந்திரனின் மனைவி துர்காதேவி (56). ராமச்சந்திரன், ராணிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    இந்தத் தம்பதிக்கு ஜெயந்தி, ஹேமலதா என இரு மகள்கள் உள்ளனர். மகன் தெய்வேந்திரன் ஆஸ்திரேலியாவில் வேலை செய்து வருகிறார். மகள்களுக்கு திருமணமாகிவிட்டது. துர்காதேவி இங்கு தனியாக வசித்து வந்தார். ராமச்சந்திரன் வாரம் ஒரு முறை ராணிப்பேட்டையில் இருந்து இங்கு வந்து செல்வாராம். துர்காதேவி அந்தப் பகுதியில் வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழிலும் செய்து வந்துள்ளார்.

    ராணிப்பேட்டையில் வசிக்கும் ஹேமா, தனது தாயாரைப் பார்க்க புதன்கிழமை மாலை வீட்டுக்கு வந்தார். அப்போது, வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததாம் ஜன்னல் வழியாக பார்த்தபோது அங்கு துர்காதேவி கழுத்து அறுபட்டு கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    தகவலறிந்த திரு.வி.க. நகர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து துர்காதேவியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர. விசாரணையில் துர்கா அணிந்திருந்த தங்க நகைகளும் வீட்டில் இருந்த நகைகளும் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

    மேலும் துர்காதேவி இடது கை மோதிர விரல் மற்றும் நடுவிரலில் அணிந்திருந்த மோதிரத்தை கழற்ற முடியாததால் அந்த இரு விரல்களையும் கொடூரமான முறையில் துண்டித்து மோதிரத்தை கொள்ளையடித்திருப்பதும் தெரியவந்தது. இந்தச் சம்பவத்தில் துர்காதேவிக்கு தெரிந்த நபரே ஈடுபட்டிருக்க வேண்டும் என போலீஸார் சந்தேகித்தனர். போலீஸாரின் தீவிர விசாரணையில் ஓட்டேரியைச் சேர்ந்த ரயில்வே துப்புரவு தொழிலாளி கார்த்திக் (21), துர்காவை கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் கார்த்திகை கைது செய்து, அவரிடமிருந்த 10 பவுன் தங்க நகையை பறிமுதல் செய்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் துர்காவிடம் கந்து வட்டிக்கு கடன் வாங்கியதாகவும், அதன் மூலம் இருவருக்கும் நல்ல தொடர்பு இருந்ததாகவும், இந்த தொடர்பு நாளடைவில் தவறான உறவாக மாறியதாகவும் தெரிவித்தாராம். மேலும் தனக்கு பணம் அதிகமாக தேவைப்பட்டதால் துர்காவை கொலை செய்து பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டதாகவும் அதன்படி செவ்வாய்க்கிழமை துர்கா வீட்டுக்குச் சென்று அவரிடம் பேச்சு கொடுத்தவாறே திடீரென கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai