Enable Javscript for better performance
ஸ்ரீபால் மறைவுக்கு கருணாநிதி இரங்கல்- Dinamani

சுடச்சுட

    

    ஓய்வு பெற்ற டி.ஜி.பி. ஸ்ரீபால் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

    தமிழக காவல் துறையில் டி.ஜி.பி.யாகப் பணியாற்றிய ஸ்ரீபால் மறைவு செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன். காவல் துறையில் அவர் கண்காணிப்பாளராக பணியாற்றிய காலம் முதல் அவரை நான் நன்கு அறிவேன். ஸ்ரீபாலுடைய நுட்பமான திறமையைக் கண்டு, காவல் துறையில் புலனாய்வுத் துறையின் அதிகாரியாக என் ஆட்சிக் காலத்தில் நியமித்தேன்.

    சென்னை மாநகர காவல் ஆணையராக தொடர்ந்து 5 ஆண்டுகள் பணியாற்றிய பெருமையும் இவருக்கு உண்டு. ஜெயின் சமூக ஆய்வுக் கழகத்தின் தலைவராகவும், சென்னை பல்கலைக்கழகத்தின் கெüரவப் பேராசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். காவல் துறையில் நேர்மையோடும், நிதானம் தவறாமலும், மனிதநேயத்தோடும் பணியாற்றிய காவல் துறை அதிகாரிகளில், ஸ்ரீபால் தலை சிறந்தவர். அவரது மறைவுக்காக, அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai