Enable Javscript for better performance
160 ஆண்டு இந்திய ரயில்வே: 3 நாள் புகைப்பட கண்காட்சி தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    160 ஆண்டு இந்திய ரயில்வே: 3 நாள் புகைப்பட கண்காட்சி தொடக்கம்

    By dn  |   Published on : 27th March 2014 03:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    railway

    இந்திய ரயில்வேயின் 160-ஆவது ஆண்டை கொண்டாடும் வகையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புகைப்படக் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த புகைப்படக் கண்காட்சி வெள்ளிக்கிழமை வரை (மார்ச் 28) நடைபெறுகிறது. முன்னதாக சென்னை கோட்ட மேலாளர் பி.கே.மிஸ்ரா கண்காட்சியைத் திறந்து வைத்து பார்வையிட்டார்.

    கடந்த 160 ஆண்டுகளில் இந்திய ரயில்வேயில் ஏற்பட்ட வளர்ச்சி குறித்த புகைப்படங்கள், தொடக்கத்தில் பரோடாவின் கெய்க்வாட் குடும்பம், மனிதர்களையும் பொருள்களையும் சுமந்து செல்லும் ரயிலை எருதுகளைப் பூட்டி பயன்படுத்தி வந்தது.

    கடந்த 1836-இல் தொடங்கப்பட்ட ரெட்ஹில்ஸ் ரயில்வே, மெட்ராஸ் நகரில் சாலைகளை அமைப்பதற்கு கற்களைக் கொண்டு வந்தது, இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலாக் கழகம் இயக்கும் அரண்மனை போன்ற 6 சொகுசு ரயில்கள் உள்ளிட்ட பல்வேறு அரிய கருப்பு-வெள்ளை புகைப்படங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. மூன்று நாள்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட அனுமதி இலவசம் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai