Enable Javscript for better performance
108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்த அறிவிப்பு வாபஸ்- Dinamani

சுடச்சுட

    

    108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்த அறிவிப்பு வாபஸ்

    By dn  |   Published on : 18th October 2014 03:00 AM  |   அ+அ அ-   |    |  

    போனஸ் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அறிவித்த வேலை நிறுத்தப் போராட்டம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு வாபஸ் பெறப்பட்டது.

    இதையடுத்து, வரும் 21, 22-ஆம் தேதிகளில் வழக்கம் போல ஆம்புலன்ஸ் சேவை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர்கள், ஆபத்துகால உதவியாளர்கள், தொலைபேசி சேவை மையம் ஆகியவற்றில் மொத்தம் 3,350 பேர் பணியாற்றுகின்றனர். தமிழகத்தில் மொத்தமாக 684 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீபாவளி தினத்தில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அறிவித்திருந்தனர்.

    இதையடுத்து ஊழியர் சங்க நிர்வாகிகளுடன் 108 ஆம்புலன்ஸ் சேவையை நடத்தி வரும் ஜி.வி.கே. இ.எம்.ஆர்.ஐ. நிறுவன அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தீபாவளிக்கு கருணைத் தொகையாக ரூ. 4800 தருவதற்கு நிர்வாகத் தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டதாக ஊழியர் சங்கப் பிரதிநிதிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    வேறு கோரிக்கைகளையும் பரிசீலிப்பதாக கூறப்பட்டதை அடுத்து வேலைநிறுத்த அறிவிப்பை ஊழியர் சங்கத்தினர் வாபஸ் பெற்றுக் கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai