"பாரதியின் கவிதைகளைப் படிப்பவர்களின் சிந்தனையில் மாற்றம் பிறக்கும்'

பாரதியின் கவிதைகளை தினமும் படிப்பவர்களின் சிந்தனைகளில் மாற்றம் பிறக்கும் என்று சென்னை பாரதியார் சங்கத்தின் தலைவரும், மூத்த வழக்குரைஞருமான இரா.காந்தி தெரிவித்தார்.
"பாரதியின் கவிதைகளைப் படிப்பவர்களின் சிந்தனையில் மாற்றம் பிறக்கும்'

பாரதியின் கவிதைகளை தினமும் படிப்பவர்களின் சிந்தனைகளில் மாற்றம் பிறக்கும் என்று சென்னை பாரதியார் சங்கத்தின் தலைவரும், மூத்த வழக்குரைஞருமான இரா.காந்தி தெரிவித்தார்.

சென்னை பாரதியார் சங்கம், ஸ்ரீ தியாக பிரம்ம கான சபா, கிருஷ்ணா சுவீட்ஸ் ஆகியவற்றின் சார்பில், "பாரதி விழா- தமிழறிஞர்களுக்கு விருது வழங்கும் விழா' சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், வழக்குரைஞர் இரா.காந்தி பேசியது:

செப்டம்பர் 11-ஆம் தேதி பாரதி யின் நினைவு நாளாக அனுசரிக்கப்படுகிறது. ஆனால் பாரதி சாகவில்லை; இன்றும் நம்மிடையே கவிதைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். தன்னம்பிக்கை விதைக்கக்கூடிய பல்வேறு கவிதைகளை அவர் இயற்றியுள்ளார். பாரதியின் கவிதைகளை தினமும் படித்தால் உங்களின் சிந்தனைகளில் மாற்றம் பிறக்கும் என்றார். விழாவில், சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் இரா.தாண்டவன் கலந்து கொண்டு தமிழறிஞர்களுக்கு விருதுகள் வழங்கி கெüரவித்தார். இதில், தமிழறிஞர் தெ.ஞானசுந்தரத்துக்கு பாரதியார் விருதும், எம்.ஓ.பி.வைஷ்ணவ கல்லூரி முதல்வர் லலிதா பாலகிருஷ்ணன், எத்திராஜ் மகளிர் கல்லூரியின் முதல்வர் நிர்மலா, இசை அறிஞர் மீனாட்சி சீனிவாசன், நாட்டியக் கலைஞர் நர்த்தகி நடராஜ் ஆகியோருக்கு பாரதி கண்ட புதுமைப் பெண் விருதும் வழங்கப்பட்டன.

டாக்டர் விமலா, முனைவர் கருணாநிதி, முனைவர் சுடலி தியாகராஜன், பேராசிரியர் பானுமதி ஆகியோருக்கு பாரதி கண்ட கல்வியாளர் விருதும், அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், புதுகைத் தென்றல் புதுகை தருமராசன் ஆகியோருக்கு பாரதி கண்ட சிறந்த பத்திரிகையாளர் விருதும், எஸ்.பி.முத்துராமன், இளைய இயக்குநர் லாரன்ஸ் ஜெயக்குமார் ஆகியோருக்கு சிறந்த திரைப்பட இயக்குநர் விருதும் வழங்கப்பட்டன.

இதயத்துல்லா, செயின்ட் ஜோசப் ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியை ஞானசெல்வம், சமூக ஆர்வலர் ஜேன் வசீகரன் ஆகியோருக்கு சிறந்த சமூகத் தொண்டாளர் விருதும், விஜய கிருஷ்ணன், நெல்லை இராமச்சந்திரன் ஆகியோருக்கு சிறந்த கவிஞர் விருதும் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com