Enable Javscript for better performance
\\\"காமராஜர் துறைமுக முதல் கட்ட சரக்குப் பெட்டக முனையம் அடுத்த ஆண்டு தயாராகும்\\\'- Dinamani

சுடச்சுட

    

    "காமராஜர் துறைமுக முதல் கட்ட சரக்குப் பெட்டக முனையம் அடுத்த ஆண்டு தயாராகும்'

    By dn  |   Published on : 17th April 2015 03:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காமராஜர் துறைமுகத்தின் முதல் கட்ட சரக்குப் பெட்டக முனையம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் தயாராகிவிடும் என்று அதன் திட்டத் தலைவர் கேப்டன் ராம்நாத் வைத்தியநாதன் தெரிவித்தார்.

    சென்னை வர்த்தக தொழில் சபையும் காமராஜர் துறைமுகமும் இணைந்து 3-ஆவது வர்த்தக கூட்டத்தை நடத்தின. இந்த கூட்டத்தில் ராம்நாத் வைத்தியநாதன் பேசியதாவது: காமராஜர் துறைமுகத்தின் முதல் கட்ட சரக்குப் பெட்டக முனையம் ரூ.1270 கோடியில் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் பணிகள் முடிந்துவிடும்.

    இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை 14 சதவீத பணிகள் முடிக்கப்படவேண்டும் என்பது இலக்கு. ஆனால், தற்போது 32 சதவீத பணிகள் முடிந்துள்ளன. இந்தப் புதிய சரக்குப் பெட்டக முனையம் காகிதமற்ற முனையமாக (இ-கண்டெயினர் டெர்மினல்) செயல்படும். குஜராத் மாநிலத்தின் ஹஸிரா துறைமுகத்துக்குப் பிறகு காகிதமற்ற சரக்குப் பெட்டக முனையமாக காமராஜர் துறைமுகமே இருக்கும்.

    முதல் கட்டப் பணியில் அதானி குழுமம் ரூ. 780 கோடி செலவிடவுள்ளது. மீதமுள்ள ரூ. 500 கோடி இரண்டாம் கட்டப் பணியில் பயன்படுத்தப்படும். இந்த சரக்குப் பெட்டக முனையம் சுமார் 7 லட்சம் சரக்குப் பெட்டகங்களைக் கையாளும் திறன் கொண்டது. முனையத்தில் 4 நவீன கிரேன்களும் (கூவே கிரேன்) 12 ரப்பர் டயர் கொண்ட கான்ட்ரி கிரேன்களும் பயன்படுத்தப்படும்.

    முனையத்துக்கென பிரத்யேகமாக இரண்டு ரயில் பாதைகள் அமைக்கப்படும். ஐஸ்கேட் எனப்படும் மத்திய கலால், சுங்க வாரியத்தின் இ-வணிக இணையதளத்துடன் முனையம் இணைக்கப்படும் என்றார் கேப்டன் ராம்நாத் வைத்தியநாதன்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai