Enable Javscript for better performance
கிழக்கு கடற்கரைச் சாலையில் சடலத்துடன் பொதுமக்கள் சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    கிழக்கு கடற்கரைச் சாலையில் சடலத்துடன் பொதுமக்கள் சாலை மறியல்

    By dn  |   Published on : 17th April 2015 02:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் சடலத்துடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சென்னை அருகே உள்ள உத்தண்டி ஜீவா தெருவைச் சேர்ந்த கணினிப் பொறியாளர் ராமன். இவரது வீட்டில் மலைக்கொழுந்து (எ) கணேசன் (32) கார் ஓட்டுநராகவும், அவரது மனைவி மீனா (30) வீட்டு வேலையும் செய்து வந்தனர். இத் தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன. இவர்களது சொந்த ஊர் புதுக்கோட்டை ஆகும்.

    இவர்கள் ராமன் வீட்டின் ஒரு பகுதியில் வசித்தனர். இந்த நிலையில் அண்மைக்காலமாக மீனாவுக்கு உடல் நலம் சரியில்லாததால் அவரால் வீட்டு வேலை செய்ய முடியவில்லை.

    இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை கணேசன், ராமனிடம், மீனா உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால், தான் மட்டும் வேலை செய்கிறேன் என்று கூறியதாக தெரிகிறது. அதற்கு ராமன், வீட்டை காலி செய்யுமாறு கணேசனிடம் கூறினாராம்.

    இதனால் மனம் உடைந்த கணேசன், அன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது. இது குறித்து கானாத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து,விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் நிவாரணம் வழங்கக் கோரி, கணேசனின் சடலத்தோடு புதன்கிழமை இரவு கிழக்கு கடற்கரைச் சாலையில் மீனாவும் அவரது உறவினர்களும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, போராட்டக்காரர்களைச் சமாதானப்படுத்தினர்.

    இதையடுத்து, அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்தப் போராட்டத்தால், அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai