Enable Javscript for better performance
கோயிலில் பெண்களிடம் நகை பறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    சென்னை கோயம்பேடு சிவன் கோயிலில் பிரதோஷ வழிபாட்டில் ஈடுபட்ட இரு பெண்களிடம் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டது.

    இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

    சூளைமேடு, பெரியார் பாதை பகுதியைச் சேர்ந்தவர் பானுமதி (64). இவர் கோயம்பேடு சிவன் கோயிலில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் பங்கேற்கச் சென்றார். அங்கு அவர் பிரதோஷ வழிபாட்டில் ஈடுபட்டிருந்தபோது, அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர் பறித்துச் சென்றார்.

    பிரதோஷ வழிபாட்டுக்கு வந்திருந்த கோயம்பேடு, கனகசபா காலனியைச் சேர்ந்த லட்சுமியிடமும் (62) 4 பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.

    இது குறித்து கோயம்பேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai