Enable Javscript for better performance
சர்வதேச முதலீட்டாளர் மாநாடு: முன்பதிவுக்கு ஏப்ரல் 25 வரை விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    சர்வதேச முதலீட்டாளர் மாநாடு: முன்பதிவுக்கு ஏப்ரல் 25 வரை விண்ணப்பிக்கலாம்

    By dn  |   Published on : 17th April 2015 03:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்கவும், காட்சி அரங்குகளை அமைக்கவும் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு வரும் 25-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. முன்பதிவுக்கென முதலீட்டாளர் மாநாட்டு இணையதளத்தில் தனி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    இது குறித்து தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: சர்வதேச முதலீட்டாளர் மாநாடு, சென்னையில் மே 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

    5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தொழில் முதலீட்டாளர்கள் தங்களின் தயாரிப்புகள், சேவைகளை 250-க்கும் மேற்பட்ட காட்சி அரங்குகளில் பார்வைக்கு வைக்கவுள்ளனர். இந்த பொருள்காட்சி, நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு  www.tamilnadugim.com என்ற இணையதளத்தின் வழியாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    ஏப்ரல் 25 கடைசி: உணவு பதப்படுத்துதல், விவசாய வர்த்தகம், மோட்டார் வாகனம், மோட்டார் வாகன உதிரி பாகங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்னணு பொருள் உற்பத்தி தொடர்புடைய 12 முன்னணித் துறைகள் இந்த மாநாட்டில் முன்னிறுத்தப்பட உள்ளன. இதற்கான முன்பதிவு வேகமாகவும், விரைவாகவும் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பதிவு செய்வதற்கான கடைசி நாள், ஏப்ரல் 25 ஆகும். பொருள்காட்சி அரங்கத்துக்கான இடம், கட்டணம் ஏதுமின்றி ஒதுக்கப்படும். இதற்கென உருவாக்கப்பட்ட ஒரு குழு பொருள்காட்சிக்கு விண்ணப்பித்தவர்களை தேர்ந்தெடுத்து இடம் வழங்கும்.

    மேலும், விவரங்களுக்கு 80562 02050, 99529 44630, 99942 12176 என்ற செல்லிடப் பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai