Enable Javscript for better performance
சிவசேனை எம்.பி.யின் பேச்சுக்கு வாசன் கண்டனம்- Dinamani

சுடச்சுட

    

    முஸ்லிம்களின் வாக்குரிமையைப் பறிக்க வேண்டும் என்று சிவசேனை கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளதற்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

    பாஜக ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தளம் போன்ற அமைப்புகளின் மதவாத கொள்கைகள் தலைதூக்க ஆரம்பித்துள்ளன. சிவசேனை கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறுபான்மை மக்களுக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்து, நாட்டின் ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் பேசியுள்ளார். முஸ்லிம்களின் வாக்குரிமையைப் பறிக்க வேண்டும் என்று அவர் கூறியிருப்பதை யாரும் ஏற்கமாட்டார்கள். மத்திய அரசு இதனை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

    மதச்சார்பின்மை, ஜனநாயகம், ஒருமைப்பாடு போன்ற கொள்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் சக்திகளை அடையாளம் கண்டு ஆரம்பத்திலேயே அவற்றை மத்திய அரசு கிள்ளி எறிய வேண்டும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai