Enable Javscript for better performance
சென்னை விமான நிலையத்தில் 42-வது முறையாக விழுந்த மேற்கூரை- Dinamani

சுடச்சுட

    

    சென்னை விமான நிலையத்தில் 42-வது முறையாக விழுந்த மேற்கூரை

    By dn  |   Published on : 17th April 2015 02:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னை விமான நிலையத்தின் பன்னாட்டு முனையத்தில் வியாழக்கிழமை பிற்பகல் மேற்கூரை திடீரென கீழே உடைந்து விழுந்தது. இத்தகைய சம்பவம் சென்னை விமான நிலையத்தில் நடைபெறுவது 42-வது முறையாகும்.

    விமான நிலையத்தின் பன்னாட்டு முனையத்தில் பயணிகள் வருகைக்கான இரண்டாவது வாயில் அருகே பிற்பகல் 2 மணி அளவில் திடீரென மேற்கூரை கீழே விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் யாரும் காயமடையவில்லை.

    சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து, உள்நாட்டு முனையம், வெளிநாட்டு முனையம் ஆகியவை நவீனமயமாக விரிவுபடுத்தப்பட்டு 2013-இல் திறக்கப்பட்டது.

    திறக்கப்பட்ட சில நாள்களில் இருந்தே இப்போது வரை மேற்கூரை கீழே விழுவதும் கண்ணாடி உடைந்து விழுவதும் தொடர்கதையாக உள்ளது.

    கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி கதவில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி உடைந்து விழுந்ததில் விமான நிலைய தொழில்நுட்பப் பணியாளர் ஒருவர் காயமடைந்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai