Enable Javscript for better performance
\\\"செயற்கை எலும்பு பயன்பாடு அதிகரிப்பு\\\'- Dinamani

சுடச்சுட

    
    operation

    செயற்கை எலும்பு பயன்பாடு அதிகரித்திருப்பதால், எலும்புப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருப்பதாக, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் மயில்வாகனன் நடராஜன் கூறினார்.

    தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சிகிச்சைத் துறை இயக்குநர் அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட டாக்டர் ஏ.ஸ்ரீனிவாசன் நினைவுச் சொற்பொழிவு சென்னை, வேப்பேரியில் உள்ள சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

    இதில் டாக்டர் மயில்வாகனன் நடராஜன் பேசியது:

    இந்தியாவில் செயற்கை எலும்புகள் பரவலாக அறிமுகமாவதற்கு முன்னர் எலும்புப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கால்களை இழக்க வேண்டிய சூழல் நிலவியது.

    பின்னர் உள்நாட்டிலேயே செயற்கை எலும்புகள் வடிவமைக்கப்பட்டு மிகப் பெரிய சாதனை படைக்கப்பட்டது. இந்தச் செயற்கை எலும்புகள் தற்போது நாட்டின் பல மாநிலங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்மூலம் எலும்புப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது என்றார்.

    பின்னர், 1988-ஆம் ஆண்டு உள்நாட்டிலேயே தான் வடிவமைத்த இந்த செயற்கை எலும்பு குறித்து விரிவாக எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சு.திலகர் பங்கேற்றுப் பேசினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai