Enable Javscript for better performance
தலைமை நீதிபதி வீடு முற்றுகை:மேலும் ஒரு வழக்குரைஞர் கைது- Dinamani

சுடச்சுட

    

    தலைமை நீதிபதி வீடு முற்றுகை:மேலும் ஒரு வழக்குரைஞர் கைது

    By dn  |   Published on : 17th April 2015 02:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னையில் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி வீட்டை முற்றுகையிட்டது தொடர்பாக மேலும் ஒரு வழக்குரைஞர் கைது செய்யப்பட்டார்.

    இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

    சென்னை, கீரின்வேஸ் சாலையில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கெளல் வீடு உள்ளது. இந்த வீட்டை சைதாப்பேட்டை நீதிமன்றத்தைச் சேர்ந்த சில வழக்குரைஞர்கள் கடந்த 4-ஆம் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    இதுகுறித்து பட்டினப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, 3 வழக்குரைஞர்களைக் கைது செய்தனர். இந்த நிலையில், இந்த வழக்குத் தொடர்பாக போலீஸார், வழக்குரைஞர் மு.முகம்மது ரபீக் (45) என்பவரை புதன்கிழமை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட ரபீக் உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai