Enable Javscript for better performance
தி.க., சிவசேனை மோதல்: மேலும் 6 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    சென்னை வேப்பேரியில் திராவிடர் கழகம், சிவசேனை மோதல் தொடர்பாக மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

    வேப்பேரி, பெரியார் திடலில் திராவிடர் கழகம் சார்பில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தாலி அகற்றும் நிகழ்ச்சிக்கு இந்து இயக்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

    தாலி அகற்றும் நிகழ்ச்சியைக் கண்டித்து சிவசேனை கட்சியினர், பெரியார் திடல் எதிரே முழக்கங்கள் எழுப்பினர். இதையடுத்து திராவிடர் கழகத்தினருக்கும், சிவசேனை கட்சியினருக்கும் மோதல் ஏற்பட்டது.

    இதுகுறித்து வேப்பேரி போலீஸார் இரு தரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக சிவசேனை கட்சியைச் சேர்ந்த 11 பேரையும், திராவிட கழகத்தைச் சேர்ந்த 9 பேரையும் கைது செய்தனர்.

    இதனிடையே இந்தவழக்குத் தொடர்பாக திராவிடர் கழகத்தைச் சேர்ந்த செல்வேந்திரன், பாஸ்கர், இளந்திரையன், ப.வேல்முருகன், வீரத்தமிழன், பொன்.பாலா ஆகிய 6 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

    மீண்டும் போக்குவரத்து: இந்த மோதல் காரணமாக பெரியார் திடல் உள்ள வேப்பேரி, ஈ.வெ.கி.சம்பத் சாலையில் இரண்டு நாள்களாக போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. இதனால் அந்தப் பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் பாதிக்கப்பட்டனர்.

    இந்தச் சாலையில் வியாழக்கிழமை காலை 11 மணி முதல் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. இருப்பினும் அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai