Enable Javscript for better performance
பாதுகாப்பு சேவைப் பணிகளின் இலவசப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    பாதுகாப்பு சேவைப் பணிகளின் இலவசப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

    By dn  |   Published on : 17th April 2015 03:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னை மாவட்டத்தில் பாதுகாப்பு சேவைப் பணிகளின் இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி அறிவித்தார்.

    இது குறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமானது, இளைஞர்கள் வேலைவாய்ப்பைப் பெறும் வகையில் பாதுகாப்பு சேவைப் பணிகள் குறித்த 21 நாள்கள் திறன் எய்தும் பயிற்சியினை நடத்தவுள்ளது.

    இந்தப் பயிற்சி தமிழ்நாடு காவல்துறையுடன் இணைந்து, சென்னை அசோக் நகர் காவலர் பயிற்சி பள்ளியில் இலவசமாக நடத்தப்படுகிறது. பயிற்சியில் சேருவதற்கு 18 முதல் 45 வயதுக்குள்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு கல்வித் தகுதியாகும். பயிற்சியின் போது, மதிய உணவு, தேநீர் இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிவில் வெற்றிகரமாக பயிற்சியை நிறைவு செய்பவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படுவதோடு, தனியார் துறை பாதுகாப்பு சேவை நிறுவனங்களில் சேருவதற்கு ஏதுவாக வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்படும்.

    இந்தப் பயிற்சிக்காக, சென்னை மாவட்டத்தில் 250 நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பயிற்சியில் சேர விருப்பம் உடையவர்கள் தங்களது கல்விச் சான்று, சாதிச் சான்று, குடும்ப அட்டை ஆகியவற்றின் அசல், நகல்கள், சமீபத்தில் எடுக்கப்பட்ட இரண்டு பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்களுடன் வரும் ஏப்ரல் 20, 21-ஆம் தேதிகளில் சென்னை அசோக் நகர், காவலர் பயிற்சி பள்ளியில் அளிக்கப்படும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, அந்த அலுவலகத்திலேயே வழங்கலாம் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai