Enable Javscript for better performance
பெற்றோர், ஆசிரியர் கண்டிப்பு: பள்ளி மாணவர் தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    சிறப்புப் பயிற்சி வகுப்புக்கு செல்லாதது ஏன் என பெற்றோர், ஆசிரியர் கண்டித்ததால் பள்ளி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மடிப்பாக்கம் அருகே உள்ள புழுதிவாக்கம் செங்கேணியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ர.பிரசாத் (15). இவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    அந்தப் பள்ளியில் 9-ம் வகுப்பு தேர்வு முடிந்துவிட்ட நிலையில், அங்கு 10-ம் வகுப்புக்குரிய சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. இந்த வகுப்புக்கு பிரசாத் சரியாக செல்வதில்லையாம்.

    இதனால், பிரசாத்தை அந்தப் பள்ளி ஆசிரியர்களும், பெற்றோரும் கண்டித்தனராம்.

    இதில் மனமுடைந்த பிரசாத், வீட்டில் தனது அறையில் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மடிப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

    செவிலியர் மாணவி தற்கொலை முயற்சி: திருநெல்வேலியைச் சேர்ந்த அந்தோணி மகள் மெர்சி (19). இவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள செவிலியர் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக கல்லூரி விடுதியிலேயே மெர்சி தங்கி இருந்தார்.

    இந்த நிலையில், மெர்சி வியாழக்கிழமை காலை நீண்டநேரம் ஆகியும் படுக்கையில் இருந்து எழுந்திருக்க வில்லை.

    இதனால் சந்தேகமடைந்த பிற மாணவிகள், அவரைப் பார்த்தபோது அருகில் தூக்க மாத்திரை பாட்டில் இருந்ததாம். அதிக அளவு தூக்க மாத்திரை சாப்பிட்டு மெர்சி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருப்பது அவர்களுக்கு தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள், மெர்சியை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai