Enable Javscript for better performance
மாரடைப்பு குறித்த புதிய ஆய்வு தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    இந்தியர்களுக்கும், ரஷியர்களுக்கும் ஏற்படும் மாரடைப்பில் ஒற்றுமை இருக்கிறதா என்பதைக் கண்டறியும் புதிய ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது.

    சென்னை ஃப்ரான்டியர் லைஃப் லைன் மருத்துவமனையும் ரஷிய ரத்த நாள ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து இந்த ஆய்வைத் தொடங்கியுள்ளனர்.

    இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னையில் வியாழக்கிழமை கையெழுத்தாகியது.

    இதுகுறித்து ஃப்ரான்டியர் லைஃப்லைன் மருத்துவமனையின் துணைத் தலைவர் டாக்டர் சஞ்சய் செரியன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியது:

    இரண்டு நாடுகளிலும் சுமார் 50 சதவீதம் பேருக்கு இருதயத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. 10 சதவீதம் பேருக்காவது மரபணு தொடர்பான பிரச்னைகளினால் மாரடைப்பு ஏற்படுகிறது. இரு நாடுகளைச் சேர்ந்தவர்களில் மாரடைப்பை உண்டாக்குவதற்கான மரபணுக்களில் ஒற்றுமை இருக்கிறதா என்பதைக் கண்டறிவதே இந்த ஆய்வின் நோக்கம்.

    அவ்வாறு மரபணுக்களில் ஏற்படும் பிரச்னைகளை அந்தந்த நாடுகளில் கிடைக்கும் இயற்கை மருந்துகளைக் கொண்டு சீர்படுத்தும் முயற்சியில் ஈடுபட உள்ளோம். இந்த ஆய்வில் இரண்டு நாடுகளிலும் 500 நோயாளிகளை ஈடுபடுத்த உள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

    ரஷிய ரத்தநாள ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் அலெக்சாண்டர் ஓரிகோவ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai