Enable Javscript for better performance
மெரீனா, எலியட்ஸ் கடற்கரைகளில் தண்ணீரில் மூழ்குபவர்களை மீட்க அதிநவீன வாகனம்- Dinamani

சுடச்சுட

    

    மெரீனா, எலியட்ஸ் கடற்கரைகளில் தண்ணீரில் மூழ்குபவர்களை மீட்க அதிநவீன வாகனம்

    By dn  |   Published on : 17th April 2015 02:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    water-bike

    சென்னை மெரீனா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரையில் தண்ணீரில் மூழ்குபவர்களை மீட்கும் வகையில் அதிநவீன வாகன சேவையை தமிழக கடலோரப் பாதுகாப்பு குழுமம் வியாழக்கிழமை தொடங்கியது.

    தமிழக கடற்கரையில் தீவிரவாத ஊடுருவலை தடுக்கும் வகையில் தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம் நவீனப்படுத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழக கடற்கரையில் ரோந்து செல்வதற்காக சமவெளி, சகதி மணல் என அனைத்து நிலபரப்பிலும் செல்லக் கூடிய வகையில் (அப்ப் பங்ழ்ழ்ஹண்ய் யங்ட்ண்ஸ்ரீப்ங்ள்) 12 அதிநவீன வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.

    சென்னைக்கு இரண்டு வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு வாகனம் மெரீனா கடற்கரைக்கும், மற்றொரு வாகனம் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரைக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

    இந்த வாகன சேவையை மெரீனா கடற்கரையில் தமிழக கடலோரப் பாதுகாப்பு குழும ஏ.டி.ஜி.பி. சி.சைலேந்திரபாபு வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். இதேபோல, எலியட்ஸ் கடற்கரையில் இந்த சேவை தொடங்கி வைக்கப்பட்டது.

    இந்த இரு கடற்கரைகளிலும் அதிகமானோர் கடலில் மூழ்கி இறக்கின்றனர். தண்ணீரில் மூழ்குபவர்களை மீட்பதற்கும், ரோந்து செல்வதற்கும் இந்த வாகனங்கள் பயன்படுத்தப்படும் என கடலோர பாதுகாப்பு குழும அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பிற வாகனங்கள் கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமேஸ்வரம், நாகப்பட்டினம் ஆகியப் பகுதிகளில் ரோந்து பணிக்குப் பயன்படுத்தப்பட உள்ளதாகவும், மேலும் நிலப் பகுதிகளிலும் செல்லக் கூடிய 12 ஜீப்கள் விரைவில் வாங்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai