Enable Javscript for better performance
ரூபாய் ஒரு கோடி சாக்லேட் மூலப் பொருளுடன் சரக்குப் பெட்டக லாரி கடத்தல்: இருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    ரூபாய் ஒரு கோடி சாக்லேட் மூலப் பொருளுடன் சரக்குப் பெட்டக லாரி கடத்தல்: இருவர் கைது

    By dn  |   Published on : 17th April 2015 03:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னையில் ரூபாய் ஒரு கோடி மதிப்புள்ள சாக்லேட் மூலப் பொருள்களுடன் சரக்குப் பெட்டக லாரியைக் கடத்தியதாக கிடங்கு உரிமையாளர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

    பாரிமுனை, அங்கப்ப நாயக்கன் தெருவைச் சேர்ந்தவர் ஜோசப் (44). இவர் வெளிநாடுகளுக்குப் பொருள்களை அனுப்புவதற்கான அனுமதி பெற்றுத் தரும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

    இவர் பொன்னேரியில் உள்ள ஒரு தனியார் சாக்லேட் மூலப்பொருள் தயாரிக்கும் நிறுவனத்தில் இருந்து இத்தாலியில் உள்ள சாக்லேட் நிறுவனத்துக்கு சாக்லேட் மூலப் பொருள்களை அனுப்பும் பணியில் ஈடுபட்டார்.

    கடந்த 8-ஆம் தேதி அந்த நிறுவனத்தின் தொழிற்சாலையில் இருந்து 5 சரக்குப் பெட்டக லாரிகளில் பல கோடி மதிப்புள்ள மூலப் பொருள்களை ஏற்றி சென்னை துறைமுகத்துக்கு அனுப்பினார். ஆனால் இதில் ஒரு லாரி, துறைமுகத்தை வந்தடையவில்லை. அது குறித்து ஜோசப் விசாரித்ததில், அந்த லாரி ரூ. 1 கோடி சாக்லேட் மூலப் பொருளுடன் கடத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

    உடனே ஜோசப், புழல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸாரின் விசாரணையில், அந்த லாரி கடத்திச் செல்லப்பட்டு, புழல், எம்.ஜி.ஆர்.நகரில் உள்ள அ.சகாயராஜ் (30) என்பவரது கிடங்கில் நிறுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அந்தக் கிடங்குச் சென்று, அந்த சரக்குப் பெட்டக லாரியை சரக்குடன் பறிமுதல் செய்தனர். மேலும் சகாயராஜையும் கைது செய்தனர்.

    அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், லாரியைக் கடத்தியதாக மாதவரம், பொன்னியம்மன்மேடு முனுசாமிநகரைச் சேர்ந்த தி.சச்சின் குப்தா (28) கைது செய்யப்பட்டார். இந்தக் கடத்தல் தொடர்பாக மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai