Enable Javscript for better performance
ரூ. 4 கோடி மதிப்புள்ள நிலம் அபகரிப்பு: மருத்துவர் உள்பட 3 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    ரூ. 4 கோடி மதிப்புள்ள நிலம் அபகரிப்பு: மருத்துவர் உள்பட 3 பேர் கைது

    By dn  |   Published on : 17th April 2015 02:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னையில் ரூ. 4 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்த வழக்கில் மருத்துவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: சைதாப்பேட்டை, ஸ்ரீநகர் காலனியைச் சேர்ந்தவர் சி.சுஷ்மா (61). அமெரிக்காவில் குடியேறிவிட்ட இவருக்கு, சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் ரூ. 4 கோடி மதிப்புள்ள நிலம் உள்ளது.

    இந்த நிலத்தின் பொது அதிகாரத்தை நெற்குன்றம், கோல்டன் ஜார்ஜ் நகரைச் சேர்ந்த ஸ்ரீராமன் என்பவரிடம் சுஷ்மா ஒப்படைத்திருந்தாராம்.

    இந்த நிலத்தை அண்மையில் ஒரு கும்பல் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அந்த நிலத்தின் போலி ஆவணங்கள் மூலம் அண்ணா சாலையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ரூ. 2.50 கோடி கடனையும் அந்தக் கும்பல் பெற்றதாம். இதை அறிந்த சுஷ்மா, ஸ்ரீராமன் மூலம் சென்னை பெருநகர காவல்துறையின் நிலமோசடி தடுப்புப் பிரிவில் புகார் செய்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, 6 பேரை உடனடியாக கைது செய்தனர்.

    இந்த வழக்கில், போலி ஆவணங்கள் தயாரித்ததாக வில்லிவாக்கம், ராஜாஜி நகரைச் சேர்ந்த அக்குபஞ்சர் மருத்துவர் தனபால் என்ற தனபாலகிருஷ்ணன் (49), பெரிய மாத்தூர் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த செல்வம் (50), குமார் (35) ஆகிய 3 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai