Enable Javscript for better performance
50 ஆயிரமாவது ரயில் பெட்டியை இந்தாண்டு ஐ.சி.எஃப். தயாரிக்கும்- Dinamani

சுடச்சுட

    

    50 ஆயிரமாவது ரயில் பெட்டியை இந்தாண்டு ஐ.சி.எஃப். தயாரிக்கும்

    By dn  |   Published on : 17th April 2015 02:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    icf

    இந்திய ரயில்வே துறைக்காக 50 ஆயிரமாவது ரயில் பெட்டியை ஐ.சி.எஃப். இந்த ஆண்டு தயாரித்து வழங்கும் என்று ஐ.சி.எஃப். பொது மேலாளர் அசோக் கே.அகர்வால் தெரிவித்தார்.

    சென்னையில் ஐ.சி.எஃப். சார்பில் புதன்கிழமை நடைபெற்ற 60 ஆவது ரயில்வே வார விழாவில் அவர் மேலும் பேசியது:

    2014 - 2015 நிதியாண்டில் ஐ.சி.எஃப். புரிந்துள்ள சாதனையைக் கௌரவிக்கும் வகையில் ரயில்வே அமைச்சகத்தால் சிறந்த உற்பத்தி பிரிவுக்கான விருதும் பாராட்டும் கிடைத்துள்ளது. கடந்த நிதியாண்டில் ஐ.சி.எஃப். 1704 ரயில் பெட்டிகளைத் தயாரித்து வழங்கியுள்ளது. இந்த இலக்கினை ஐ.சி.எஃப். தனது வரலாற்றில் முதல் முறையாக எட்டியுள்ளது.

    ரயில்வே வாரியத்தின் வழிக்காட்டுதலின்படி துருப்பிடிக்காத ரயில் பெட்டிகளைத் தயாரிக்க தேவையான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுவிட்டன. மேலும் அதிநவீன தொழில் நுட்பம், எடை குறைவான, அதிலும் மிக நீளமான பெட்டிகளும் தயாரிக்கப்படுகின்றன. இந்த வகை பெட்டிகள் தயாரிப்பதன் மூலம் ஒரு பெட்டியில் அதிகளவிலான பயணிகள் பயணம் செய்ய முடியும்.

    இந்தப் பெட்டிகள் எடை குறைவாக இருப்பதால் மணிக்கு 160 கி.மீ., முதல் 200 கி.மீ. வேகம் வரை ரயில்களை இயக்க முடியும். கடந்த நிதியாண்டின் முடிவில் 65 எடை குறைந்த பெட்டிகள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. ஆனால் இந்தாண்டு 300 பெட்டிகள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. துருப்பிடிக்காத பெட்டிகள் தயாரிக்க ரயில்வே வாரியம் ரூ. 327 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

    மின்மயமாக்கப்படாத வழித்தடங்களில் இயங்கும் டீசல் - எலக்ட்ரிக் ரயில்களை தயாரிப்பதில் ரயில்வே வாரியம் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்தாண்டு இவ்வகை பெட்டிகளை அதிகளவு தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட தேவை அதிகம் இருப்பதால், 360 டீசல் - எலக்ட்ரிக் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படும் என்றார் அசோக் கே.அகர்வால்.

    ஐ.சி.எஃப். 60ஆவது ரயில்வே வார விழாவில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் முதன்மை பொறியாளர் (மெக்கானிக்) பங்கஜ் குமார், முதன்மை மனித வள அதிகாரி கே.ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai