சுடச்சுட

  
  RAVI

  இந்த ஆண்டுக்கான சிற்பி இலக்கிய விருதுக்கு கவிஞர் ரவி சுப்ரமணியம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

  கவிஞர் ரவி சுப்ரமணியம் "ஒப்பனை முகங்கள்', "காத்திருப்பு', "காலாதீத இடைவெளியில்', "சீம்பாலில் அருந்திய நஞ்சு' உள்ளிட்ட ஏராளமான கவிதை நூல்களை எழுதியவர். மேலும் 100-க்கும் மேற்பட்ட ஆவணப் படங்களையும் தயாரித்துள்ளார். சிற்பி இலக்கிய விருது கடந்த 20 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான சிற்பி இலக்கிய விருது கவிஞர் ரவி சுப்ரமணியத்துக்கும், சிற்பி இலக்கியப் பரிசு பொள்ளாச்சி இலக்கிய வட்டத் தலைவர் க.அம்சப்பிரியா, சமூக நற்பணிக்கான விருது வனவியல் புகைப்படங்களை எடுத்து வரும் மாணவர் கே.ஏ.தனுபரன் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது.

  பொள்ளாச்சி என்.ஜி.எம். கல்லூரி அரங்கில் ஆகஸ்ட் 19-ஆம் தேதி விருது வழங்கும் விழா நடைபெறும். பாரதிய வித்யா பவன் தலைவர் பி.கே. கிருஷ்ணராஜ் வாணவராயர் விழாவுக்கு தலைமை வகித்து விருதுகளை வழங்கவுள்ளார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai