சுடச்சுட

    

    போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்க விசா பெற முயன்ற கேரள நடிகை கைது

    By சென்னை,  |   Published on : 27th August 2015 03:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்கா செல்ல விசா பெற முயன்ற கேரள நடிகை உள்பட 3 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
     கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் நீத்து கிருஷ்ணாவாசு (27). இவர் மலையாளப் படங்களில் நடித்துள்ளார். இவர், அமெரிக்கா செல்வதற்காக விசா கோரி சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தில் விண்ணப்பித்திருந்தார்.
     இவருக்கு நேர்முக விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இவருடன் ஜஸ்டின் தாமஸ் (35), பி. சுபாஷ் (38) ஆகியோரும் வந்திருந்தனர்.
     அவர்கள் அமெரிக்காவில் நடைபெறும் திருமணத்துக்கு செல்வதற்காக விசா விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்திருந்தார். ஆனால், அவர்கள் சமர்ப்பித்த திருமண அழைப்பிதழ் போலியானது என்பது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை செய்ததில், அமெரிக்காவில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் நடனம் ஆடி பணம் சம்பாதிக்க விசா கோரியதாகத் தெரிவித்தனர்.
     இதையடுத்து தூதரக பாதுகாப்பு அதிகாரிகள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் கேரள நடிகை உள்ளிட்ட 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக மேலும் இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai