Enable Javscript for better performance
கும்பாபிஷேக கூட்டத்தில் தங்கச் சங்கிலி பறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    சென்னை குரோம்பேட்டையில் கோயில் கும்பாபிஷேக கூட்டத்தில் 4 பக்தர்களிடம் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

    குரோம்பேட்டை நியூ காலனி ஸ்ரீராம் நகர் ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

    இந்த விழாவில் அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

    இதைப் பயன்படுத்தி சில மர்ம நபர்கள் சிட்லபாக்கத்தைச் சேர்ந்த நா.வித்யாவிடம் 4 பவுன் தங்கச் சங்கிலியையும், குரோம்பேட்டை மும்மூர்த்திநகரைச் சேர்ந்த மனோரஞ்சிதத்திடம் 3 பவுன் தங்கச் சங்கிலியையும், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த அர்ஜுனன் மகள் கோபிகாவிடம் ஒரு பவுன் தங்கச் சங்கிலியையும், சோழன்நகரைச் சேர்ந்த சுந்தரம்மாளிடம் 6 பவுன் தங்கச் சங்கிலியையும் பறித்துச் சென்றனர்.

    இதுகுறித்து தங்கச் சங்கிலியை இழந்தவர்கள், குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai