Enable Javscript for better performance
தீப்பிடிக்கும் குழந்தைக்கு சிகிச்சை: மருத்துவர்கள் இன்று ஆலோசனை- Dinamani

சுடச்சுட

    

    தீப்பிடிக்கும் குழந்தைக்கு சிகிச்சை: மருத்துவர்கள் இன்று ஆலோசனை

    By DN  |   Published on : 27th January 2015 05:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தீப் பிடிக்கும் குழந்தைக்கான சிகிச்சையின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து செவ்வாய்க்கிழமை (ஜன.27) ஆலோசனை நடைபெறவுள்ளது.

    விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கருணா, ராஜேஸ்வரி தம்பதியரின் 3-ஆவது குழந்தைக்கு உடலில் தானாக தீப் பிடிப்பதாகக் கூறி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஜனவரி 17-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டது.

    அந்தக் குழந்தை பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் தனி அறையில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் எந்த பாதிப்பும் இல்லாதது தெரிய வந்துள்ளது.

    இதைத் தொடர்ந்து கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் குணசேகரன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஐந்து பேர் கொண்ட குழுவினர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். இதுகுறித்து டாக்டர் குணசேகரன் கூறியது:

    குழந்தையின் பரிசோதனை முடிவுகளில் எந்தவித பாதிப்பும் இல்லை. குழந்தையின் காலில் உள்ள தீப்புண் காயங்களும் முழுவதுமாக ஆறிவிட்டன. தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் தனியறையில் வைத்து கண்காணித்து வருகிறோம். குழந்தையின்  செயல்பாடுகளில் எந்தப் பிரச்னையும் இல்லை.

    இதைத் தொடர்ந்து, குழந்தைக்கான சிகிச்சையின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளோம். அதன் பின்புதான் குழந்தையின் சிகிச்சை குறித்தோ, குழந்தை வீடு திரும்புவது குறித்தோ முடிவு செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai