Enable Javscript for better performance
விமான பணிப்பெண் வீட்டில் நகைகள், பணம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    சென்னை நங்கநல்லூரில் விமான பணிப்பெண் வீட்டில் தங்க நகைகள், பணம் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

    ஹிமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்தவர் சாமிளா (30). இவர் சென்னையில் உள்ள ஒரு விமான நிறுவனத்தில் பணிப்பெண்ணாக வேலை செய்து வருகிறார். நங்கநல்லூர்

    55-ஆவது தெருவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் வாடகைக்கு குடியிருக்கிறார்.

    திங்கள்கிழமை காலை பணிமுடிந்து சாமிளா வீட்டுக்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து நங்கநல்லூர் காவல் நிலையத்தில் சாமிளா புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai