Enable Javscript for better performance
அதிகக் கட்டணம் வசூல்: பள்ளியை பெற்றோர் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதைக் கண்டித்து, சென்னை அசோக்நகரில் உள்ள தனியார் பள்ளியை பெற்றோர் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

    சென்னை அசோக்நகர் ஆரியகவுடா சாலையில் ஒரு தனியார் பள்ளி செயல்டுகிறது. இந்த பள்ளி நிர்வாகத்தினர் அண்மையில் மாணவர்களின் ஆண்டு கட்டணத்தை முன் அறிவிப்பு இன்றி திடீரென உயர்த்தியதாகக் கூறப்படுகிறது. இதற்கு அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்நிலையில், மாணவர்களின் பெற்றோர் செவ்வாய்க்கிழமை அந்த பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த போலீஸார், அவர்களை சமாதானப்படுத்தினர். பள்ளி நிர்வாகம், பெற்றோர் என இரு தரப்பினருடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், பெற்றோர் போராட்டத்தை கைவிட்டனர்.

    இந்த திடீர் போராட்டத்தினால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai