Enable Javscript for better performance
உமாசங்கர் ஐ.ஏ.எஸ். மீது நடவடிக்கை: இந்து முன்னணி வரவேற்பு- Dinamani

சுடச்சுட

    

    உமாசங்கர் ஐ.ஏ.எஸ். மீது நடவடிக்கை: இந்து முன்னணி வரவேற்பு

    By dn  |   Published on : 28th January 2015 03:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் மீது தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எடுத்துள்ள நடவடிக்கையை இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராம.கோபாலன் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

    தொடர்ந்து மத பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி போராடி வருகிறது. காவல் துறையிலும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    இவரால் சமூகத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், தலைமைச் செயலர் எடுத்துள்ள நடவடிக்கை வரவேற்கத்தக்கது. ஹிந்துக்களுக்குரிய சலுகையைப் பெற்று ஐ.ஏ.எஸ். ஆகவும், பதவி உயர்வும் பெற்றவர் உமாசங்கர். இவர் கிறிஸ்தவர் என்ற புகார் எழுந்தபோது, தான் ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர் என கூறி தப்பினார்.

    ஒருவர் தனிப்பட்ட முறையில் மத நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில் தவறில்லை. ஆனால் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பதைப் பகிரங்கமாக சுவரொட்டிகளில் வெளியிட்டு மத பிரச்சாரம் செய்வது சட்டத்தை மீறிய செயலாகும். தற்போது தலைமைச் செயலரின் எச்சரிக்கைக் கடிதத்துக்கும் அவர் உள்நோக்கம் கற்பித்துள்ளார். எனவே, உமாசங்கர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இராம.கோபாலன் வலியுறுத்தியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai