Enable Javscript for better performance
கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு: குழந்தைகள், பெண்களுக்கு தனித் திட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு: குழந்தைகள், பெண்களுக்கு தனித் திட்டம்

    By dn  |   Published on : 28th January 2015 04:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    post

    கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் குழந்தைகள், பெண்களுக்கு என புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளதாக அஞ்சலக வாரிய உறுப்பினரும், புது தில்லி அஞ்சலக முதலீடுகள் வாரியத் தலைவருமான அஞ்சலி தேவாஷெர் கூறினார்.

    அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டம் தொடங்கப்பட்டு 130 ஆண்டுகள் நிறைவுபெற்றதைக் கொண்டாடும் வகையில், அந்தக் காப்பீடு திட்டம் சந்தைப்படுத்துதலில் சாதனை படைத்த ஊழியர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    விழாவில் பங்கேற்று விருதுகளை வழங்கிய அஞ்சலி தேவாஷெர், பின்னர் அளித்த பேட்டி:

    அரசு ஊழியர்கள், கல்வி நிறுவனங்கள், ராணுவ ஊழியர்கள் பயன்பெறும் வகையில் அறிமுகம் செய்யப்பட்ட அஞ்சலக காப்பீடுத் திட்டம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இதுபோல் கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையல், அறிமுகம் செய்யப்பட்ட கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம் மெல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதை மேலும் மக்களிடையே கொண்டு செல்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    அதோடு, இந்த கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டத்தில் குழந்தைகள், பெண்களுக்கென தனித் திட்டத்தை அறிமுகம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்.

    இந்தக் காப்பீடு திட்டங்கள் இப்போது பெரும்பாலும், அஞ்சலகத்துக்கு நேரில் வந்தோ அல்லது முகவர்கள் மூலமாகவோ பிரீமியம் தொகை செலுத்தும் வகையில் உள்ளது. இதை எளிதாக்கும் வகையில் தகவல் தொழில்நுட்பத்தைப் புகுத்தும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    இதன் மூலம் இணைய வழியாக பிரீமியம் செலுத்துதல் உள்ளிட்ட மேலும் சில சேவைகளை மேற்கொள்ள முடியும். சோதனை முறையில் இப்போது 7 அஞ்சலக வட்டங்களில் இந்த தகவல் தொழில்நுட்ப முறை வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai