Enable Javscript for better performance
சூரிய மின்சக்திக்கான மானியத்தைந 15 சதவீதமாகக் குறைக்க பரிசீலனை- Dinamani

சுடச்சுட

    

    சூரிய மின்சக்திக்கான மானியத்தைந 15 சதவீதமாகக் குறைக்க பரிசீலனை

    By dn  |   Published on : 28th January 2015 03:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சூரிய மின்சக்தி அமைப்பை நிறுவுவதற்கான மானியத்தை 30 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகக் குறைப்பதற்கு மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

    வீட்டின் மேற்கூரைகளில் சூரிய மின்சக்தி அமைப்பை நிறுவுவதற்கு ரூ.80 ஆயிரம் வரை செலவாகிறது. இதில், மத்திய அரசு 30 சதவீதம் மானியம் வழங்குகிறது. மாநில அரசு ரூ.20 ஆயிரம் மானியம் வழங்குகிறது.

    இந்த நிலையில், சூரிய மின் சக்தி அமைப்பை நிறுவுவதற்கான மானியத்தை 30 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகக் குறைப்பது தொடர்பாக பரிசீலித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய மரபுசாரா எரிசக்தி அமைச்சகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில், இந்த மானியத்தை குறைப்பது தொடர்பாகவும், வங்கிக் கணக்குடன் இணைப்பது தொடர்பாகவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

    தொழில் நிறுவனங்கள், வணிகக் கட்டடங்களுக்கு முக்கியத்துவம் வழங்குவதற்குப் பதிலாக, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், அரசு கட்டடங்கள், வீடுகளுக்கு முன்னுரிமை வழங்க பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வீட்டின் மேற்கூரைகளில் சூரிய மின்சக்தி அமைப்பை நிறுவுவதற்கான மானியத்தைக் குறைத்தால் அதன் மூலம் சூரிய மின் சக்தியை அதிகரிக்கும் முயற்சிக்கு பின்னடைவு ஏற்படும் என நுகர்வோர் அமைப்பினர் தெரிவித்தனர்.

    நாடு முழுவதும் மேற்கூரைகளில் 285 மெகாவாட் அளவுள்ள சூரிய மின்சக்தி அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. தமிழகத்தில் 50 மெகாவாட் அளவுள்ள சூரிய மின்சக்தி அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai