Enable Javscript for better performance
\\\"சென்னை விமான நிலையத்தில் ரூ.100 கோடி தங்கம் பறிமுதல்\\\'- Dinamani

சுடச்சுட

    

    சென்னை விமான நிலையத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு மட்டும் ரூ.100 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மண்டல தலைமை சுங்கத் துறை ஆணையர் எஸ்.ரமேஷ் தெரிவித்தார்.

    சர்வதேச சுங்க தின விழா நிகழ்ச்சி சென்னை விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், சுங்கத் துறை ஆணையர் எஸ்.ரமேஷ் கூறியது:

    சுங்கத் துறை அதிகாரிகளின் முயற்சியால் கடந்த 2014-ஆம் ஆண்டு மட்டும் ரூ.100 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யபட்டுள்ளது.

    தற்போதுள்ள சந்தை மதிப்பீட்டின்படி, இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட தங்க மதிப்பில் இதுவே அதிகபட்ச பறிமுதல் ஆகும்.

    கடந்த 2013-ஆம் ஆண்டு ரூ.35 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும், இதுபோன்ற கடத்தல் நடவடிக்கைகளை தடுக்க மத்திய தொழில் பாதுகாப்புப் படை, இந்திய விமான நிலையங்கள் ஆணையம், மத்திய சுங்கத் துறை ஆகியவற்றுக்கிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்துவது அவசியம் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai