Enable Javscript for better performance
பட்டா மாறுதலுக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் தனியாக விண்ணப்பிக்க வேண்டியதில்லை!- Dinamani

சுடச்சுட

    

    பட்டா மாறுதலுக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் தனியாக விண்ணப்பிக்க வேண்டியதில்லை!

    By dn  |   Published on : 28th January 2015 04:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    patta

    பட்டா மாறுதலுக்காக வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்காமலேயே, மாறுதல் பெறும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்தத் திட்டத்தின் கீழ், சென்னை அமைந்தகரையில் 58 நபர்களுக்குப் பட்டாக்களை கைத்தறி, துணிநூல் துறை அமைச்சர் எஸ். கோகுல இந்திரா வழங்கினார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:

    வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு பட்டா மாறுதல் வேண்டி மனுதாரர்கள் அடிக்கடி செல்வதையும், கால விரயத்தையும் தவிர்க்கும் வகையில் விரைவு பட்டாக்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுப் பட்டாக்கள் வழங்கப்பட்டன.

    தற்போது, பத்திரப் பதிவுத் துறை, வருவாய்த் துறையின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து, சார்பதிவாளர் அலுவலகங்கள் மூலமாக பெறப்படும் பட்டாமாறுதல் மனுக்களின் மீது துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு பட்டா வழங்கப்பட்டு வருகிறது.

    இந்தத் திட்டத்தின் கீழ், நிலத்தினைப் பதிவு செய்யும்போதே சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் பட்டா மாறுதல் கோரி அளிக்கப்படும் மனுவானது சம்பந்தப்பட்ட வட்டாட்சியருக்கு அனுப்பப்பட்டு, உரிய கள விசாரணைக்கு பின்பு அந்த நிலத்தின் உரிமையாளருக்கு பட்டாமாறுதல் செய்து வழங்கப்படுகிறது. இதற்காக வட்டாட்சியர் அலுவலகத்தில் தனியாக விண்ணப்பிக்கத் தேவையில்லை.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தாட்சாயிணி, வட்டாட்சியர் திரு.சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai