Enable Javscript for better performance
பன்றிக் காய்ச்சலைத் தடுக்க பயிற்சி - Dinamani

சுடச்சுட

    

    சென்னையில் பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுக்க மாநகராட்சி மருத்துவ அலுவலர்களுக்கு செவ்வாய்க்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

    இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி: சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் 200 மருத்துவ அலுவலர்களுக்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பு குறித்த பயிற்சிக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    இதில் பன்றிக் காய்ச்சல் நோய் குறித்தும், அதன் அறிகுறிகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் நோயினால் பாதிக்கப்பட்டவர்களிடம் தொண்டை தடவல் மாதிரிகள் எடுப்பது குறித்து அறிவுரைகளும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது குறித்த பயிற்சிகளும் வழங்கப்பட்டன. பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில், தனி வார்டுகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. அதில் பணிபுரியும் மருத்துவ பணியாளர்களுக்கு தேவையான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும் "டாமிபுளு' மாத்திரைகளும் ஆன்டிபயாடிக் மருந்துகளும் போதுமான அளவில் உள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai