Enable Javscript for better performance
வங்கி ஊழியர் வீட்டுப் பூட்டை உடைத்து தங்க நகை, பணம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    வங்கி ஊழியர் வீட்டுப் பூட்டை உடைத்து தங்க நகை, பணம் திருட்டு

    By dn  |   Published on : 28th January 2015 04:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னை துரைப்பாக்கத்தில் வங்கி ஊழியர் வீட்டுப் பூட்டை உடைத்து தங்க நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

    துரைப்பாக்கம் சக்திநகரைச் சேர்ந்தவர் விஜயசங்கர் (35). இவர் திருவான்மியூரில் உள்ள ஒரு வங்கியில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

    விஜயசங்கர் கடந்த 24-ஆம் தேதி தனது குடும்பத்தோடு மாதவரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றார்.

    அங்கிருந்து செவ்வாய்க்கிழமை வீட்டுக்குத் திரும்பி வந்தார். அப்போது வீட்டு கதவு பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 15 பவுன் தங்கநகை, ரூ.50 ஆயிரம் திருடப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    இது குறித்து விஜயசங்கர், துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai