Enable Javscript for better performance
ஸ்டான்லி விடுதியில் சூரிய மின்சக்தியால் இயங்கும் \\\"வாட்டர் ஹீட்டர்\\\'- Dinamani

சுடச்சுட

    

    ஸ்டான்லி விடுதியில் சூரிய மின்சக்தியால் இயங்கும் "வாட்டர் ஹீட்டர்'

    By dn  |   Published on : 28th January 2015 04:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் சூரிய மின்சக்தியால் இயங்கும் "வாட்டர் ஹீட்டர்' பொருத்தப்பட்டுள்ளது.

    ஸ்டான்லி மருத்துவமனையின் அருகில் அமைந்துள்ள மாணவர் விடுதியில், 650 மருத்துவ மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். அந்த விடுதியில் ரூ.10 லட்சம் செலவில் சூரிய மின்சக்தியால் இயங்கும் "வாட்டர் ஹீட்டர்' பொருத்தப்பட்டுள்ளது.

    கல்லூரி விடுதியில் ஆறு இடங்களில் சூரிய சக்தியை உள்வாங்கும் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆறு இடங்களில் வெந்நீரை பிடித்துக் கொள்ளும் வடிகால்கள் இணைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் குடிக்கவும், குளிக்கவும் இந்த நீரைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த வசதிக்கு இதுவரை மின்சார பயன்பாடே இருந்து வந்தது. சூரிய மின்சக்தியால் இயங்கும் வாட்டர் ஹீட்டரை பொருத்துவதால் மின்சார செலவு மூன்றில் ஒரு பங்கு குறைய வாய்ப்பு உள்ளது என விடுதி வட்டாரங்கள் தெரிவித்தன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai