Enable Javscript for better performance
சர்வதேசப் பிரதிநிதிகளைக் கவர்ந்த காஷ்மீரின் \\\"பாஷ்மினா\\\' சால்வை- Dinamani

சுடச்சுட

    

    சர்வதேசப் பிரதிநிதிகளைக் கவர்ந்த காஷ்மீரின் "பாஷ்மினா' சால்வை

    By dn  |   Published on : 13th March 2015 12:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    cov

    உலகப் புகழ் பெற்ற காஷ்மீர் "பாஷ்மினா' சால்வை நேரடியாக கைத்தறி, ராட்டினம் மூலம் சென்னை கண்காட்சியில் நெய்யப்படுவது சர்வதேச வர்த்தகப் பிரதிநிதிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

    இந்திய சர்வதேசக் கைத்தறி நெசவுக் கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் புதன்கிழமை தொடங்கியது. இந்தக் கண்காட்சியைத் தமிழகக் கைத்தறி, ஜவுளித் துறை அமைச்சர் கோகுல இந்திரா தொடக்கி வைத்தார். இந்தக் கண்காட்சி வெள்ளிக்கிழமை (மார்ச் 13) வரை நடைபெறுகிறது.

    இந்திய கைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள இந்தக் கண்காட்சியில் அமெரிக்கா, ஜெர்மன், பிரான்ஸ் உள்ளிட்ட 34 சர்வதேச நாடுகளின் வர்த்தகப் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

    சர்வதேசப் பார்வையாளர்களைக் கவரும் வகையில் தமிழ்நாடு, கேரளம், ராஜஸ்தான், காஷ்மீர், மணிப்பூர்,

    ஒடிஸா, மகாராஷ்டிரம், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து இயற்கை முறையில் சாயமேற்றப்பட்ட ஆடைகள், நவீன ரக ஆடைகள், உயர் தர பருத்தி, சணல் உள்ளிட்ட பல்வேறு ஆடை ரகங்கள் என 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இது குறித்து அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா கூறியது: தமிழக பாரம்பரிய கைத்தறி ஆடைகளை சர்வதேசத் தரத்தில் ஏற்றுமதி செய்வதற்கு சிறந்த இடமாக சர்வதேச இந்திய கைத்தறிக் கண்காட்சி விளங்குகிறது. மேலும், சர்வதேசக் கைத்தறி நெசவாளர் வர்த்தகப் பிரதிநிதிகளிடையேயான விற்பனை தொடர்பினால் கைத்தறி வர்த்தகம் மேம்படும் விதமாகவும் உள்ளது என்றார் அவர்.

     

     

     

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai