Enable Javscript for better performance
இன்று தாம்பரத்தில் \\\"தினமணி\\\' சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு இயக்கம்- Dinamani

சுடச்சுட

    

    இன்று தாம்பரத்தில் "தினமணி' சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு இயக்கம்

    By  சென்னை,  |   Published on : 15th April 2016 03:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தாம்பரத்தில் "தினமணி'யும் தாகூர் பொறியியல் கல்லூரியும் இணைந்து வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 15) நடத்த உள்ளன.
     தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் இந்து மிஷன் மருத்துவமனை முன்பு வெள்ளிக்கிழமை மாலை 4 மணி அளவில் நடைபெறும் "நூற்றுக்கு நூறு வாக்குப்பதிவு' என்ற இலக்கை நோக்கிய வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை தாம்பரம் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், தாம்பரம் வருவாய்க் கோட்ட அலுவலருமான கு.விமல்ராஜ், தாம்பரம் நகர்மன்ற ஆணையர் (பொறுப்பு) முருகேசன், தாகூர் பொறியியல் கல்லூரி முதல்வர் காசிநாத பாண்டியன் ஆகியோர் தொடக்கி வைக்க உள்ளனர். நிகழ்ச்சியில் வியாபாரிகள், கல்லூரி மாணவ மாணவிகள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
     நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தினமணி நாளிதழ் மற்றும் தாகூர் பொறியியல் கல்லூரி முதல்வர் காசிநாத பாண்டியன், நிர்வாக அலுவலர் ரத்தினம், நாட்டுநலத் திட்ட அலுவலர் பேராசிரியர் வில்லியம்ஸ் ஆகியோர் செய்து வருகின்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai