Enable Javscript for better performance
\\\"எஃப்ஆர்சிஎஸ் எக்ஸிட் தேர்வு\\\': பயிற்சிக்கு மியாட் மருத்துவமனை தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    "எஃப்ஆர்சிஎஸ் எக்ஸிட் தேர்வு': பயிற்சிக்கு மியாட் மருத்துவமனை தேர்வு

    By  சென்னை,  |   Published on : 15th April 2016 03:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    எஃப்ஆர்சிஎஸ் எக்ஸிட் (பொது அறுவைச் சிகிச்சை) தேர்வு எழுத உள்ள டாக்டர்களுக்கு பயிற்சி அளிக்கும் மையமாக நாட்டிலேயே முதன்முறையாக சென்னை மியாட் மருத்துவமனையை இங்கிலாந்து ராயல் கல்லூரி தேர்வு செய்துள்ளது.
     இது தொடர்பாக மியாட் மருத்துவமனையின் நிறுவனர் பி.வி.ஏ.மோகன்தாஸ், தலைவர் மல்லிகா மோகன்தாஸ், இணை நிர்வாக இயக்குநர் பிருத்வி மோகன்தாஸ், பயிற்சி அளிக்கும் பேராசிரியர் டாக்டர் சி.செல்வசேகர், இங்கிலாந்து பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் ஐயன் ஹவ்தார்ன், டக் மெக்வின்னி, பயிலரங்க ஒருங்கிணைப்பாளர் டாக்டர் வி.பாஸ்கரன் உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:-
     பொது அறுவைச் சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்றவர் என்பதைக் குறிக்கும் "எஃப்ஆர்சிஎஸ் எக்ஸிட்' கௌரவம் இதுவரை இங்கிலாந்தில் பயிற்சி பெற்ற டாக்டர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இதற்காக இங்கிலாந்தில் 6 முதல் 8 ஆண்டுகள் செலவழிக்கத் தேவையின்றி இந்தியா உள்பட வெளிநாடுகளைச் சேர்ந்த டாக்டர்களும் இந்தத் தேர்வை எழுதும் வாய்ப்பை ராயல் கல்லூரி ஏற்படுத்தியுள்ளது.
     இங்கிலாந்தில் உள்ள கிளாஸ்கோ, எடின்பரோ ஆகிய நான்கு மருத்துவக் கல்லூரிகள் இணைந்து பொது அறுவைச் சிகிச்சையில் நிபுணத்துவத்துக்கு உரிய கௌரவ பட்டத்தை வழங்கும் "எஃப்ஆர்சிஎஸ் எக்ஸிட்' தேர்வை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தின.
     இந்தத் தேர்வை இங்கிலாந்தில் எழுத பொது அறுவைச் சிகிச்சையில் முதுநிலை அறுவைச் சிகிச்சை பட்டப்படிப்பு, துறையில் 3 ஆண்டு அனுபவம் உள்ளிட்ட தகுதிகள் தேவை. மேலும் தேர்வில் சிகிச்சை குறித்த செயல்முறை விளக்கம் ஆகியவற்றுக்கு பயிற்சி தேவை. இத்தகைய பயிற்சியை தேர்வு எழுத உள்ள இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 11 டாக்டர்களுக்கு அளிக்கும் பயிலரங்க மையமாக மியாட் மருத்துவமனை தேர்வு செய்யப்பட்டு, வியாழக்கிழமை பயிலரங்கம் தொடங்கப்பட்டுள்ளது.
     இந்தப் பயிற்சியை நிறைவு செய்யும் டாக்டர்கள் தேர்வை எளிதாக எதிர்கொண்டு வெற்றி பெற்று எஃப்ஆர்சிஎஸ் எக்ஸிட் கௌரவத்தைப் பெற முடியும். இந்தத் தேர்வு இங்கிலாந்தில் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.
     
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai