Enable Javscript for better performance
கஞ்சா விற்ற பெண் கைது- Dinamani

சுடச்சுட

    

    சென்னை முத்தியால்பேட்டையில் கஞ்சா விற்றதாக பெண் கைது செய்யப்பட்டார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
     முத்தியால்பேட்டை பிரகாசம் சாலை பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீஸாருக்கு புதன்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார், அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை பிடித்து விசாரணை செய்தனர். இதில் அவர், திருவொற்றியூர் வஷீராபேகம் (50) என்பதும், அப்பகுதியில் கஞ்சா விற்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரிடமிருந்த கஞ்சாவைப் பறிமுதல் செய்து, வஷீராபேகத்தை கைது செய்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai