Enable Javscript for better performance
\\\"சித்த மருத்துவ ஓலைச் சுவடிகளை சேகரிக்க வேண்டும்\\\'- Dinamani

சுடச்சுட

    

    "சித்த மருத்துவ ஓலைச் சுவடிகளை சேகரிக்க வேண்டும்'

    By  சென்னை,  |   Published on : 15th April 2016 03:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    38

    உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சிதறிக் கிடக்கும் சித்த மருத்துவக் குறிப்புகள் அடங்கிய ஓலைச் சுவடிகளை சேகரிக்க வேண்டும் என்று பரம்பரை சித்த மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     தமிழ் மாநில சித்த வைத்திய சங்கம், தமிழ் சித்த மருத்துவ தேசிய சங்க அறச்சாலை ஆகியவற்றின் சார்பில் உலக சித்தர்கள் தின மாநாடு சென்னையில் நடைபெற்றது.
     இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து விழாக்குழு செயலாளர் பாஸ்கரன் கூறியது:
     சித்த மருத்துவத்தின் தொன்மையையும், பாரம்பரியத்தையும் பாதுகாக்கும் வகையில் சித்த மருத்துவத்துக்கென்று தனி பல்கலைக்கழகம் ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மூலிகைப் பண்ணைகள் உருவாக்க வேண்டும்.
     உலகத்தின் பல்வேறு இடங்களிலும் சிதறிக் கிடக்கும் அரிய சித்த மருத்துவ நூல்களையும், ஓலைச் சுவடிகளையும் சேகரித்து, அவற்றைப் பாதுகாக்க நடவடிக்கை வேண்டும்.
     தக்க மொழிபெயர்ப்பாளர்களைக் கொண்டு அந்த நூல்கள், ஓலைச்சுவடிகளில் காணப்படும் மருத்துவக் குறிப்புகளை பதிப்பிக்க வேண்டும். பாரம்பரிய சித்த மருத்துவர்களுக்கென்று நல வாரியம் அமைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
     
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai