Enable Javscript for better performance
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி மலரும்: விஜயகாந்த்- Dinamani

சுடச்சுட

    

    காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழகத்தில் 2016-இல் கூட்டணி ஆட்சி மலரும் என்று தெரிவித்தார்.
     செய்யூர் பஜார் வீதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசியதாவது: எங்கள் கூட்டணியில் உள்ளவர்களுக்கு மக்களின் வறுமையைப் பற்றித் தெரியும், அவர்களின் உணர்வுகளை மதிக்கத் தெரியும்.
     தமிழ் மாநில காங்கிரஸ் தலைவராக மூப்பனார் இருந்தபோது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி மலர வேண்டும் என்ற கருத்தை அவரிடம் தெரிவித்துள்ளார். அப்போது அவர் பேசிய கூட்டணி ஆட்சி 2016-இல் மலரப் போகிறது.
     விரோதிகளைக் கூட மன்னிக்கலாம். துரோகிகளை மன்னிக்கக் கூடாது. அப்படிப்பட்ட துரோகிகள்தான் இரண்டு திராவிடக் கட்சிகளும். அவர்களுக்கு நீங்கள் எப்போதும் வாக்களிக்கக் கூடாது. காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ள திமுக ஒருபோதும் வெற்றிபெறப் போவதில்லை. 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதிக்கு பதவி ஆசை இன்னும் விடவில்லை. ஆனால், இந்த முறை அவர் கனவு பலிக்கப்போவதில்லை.
     ஆனால், தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் உள்ளவர்களுக்குப் பதவி ஆசை இல்லை. அவர்கள் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கின்றனர். எங்கள் கூட்டணிக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளது. எனவே இத் தேர்தலுக்குப் பிறகு எங்கள் கூட்டணி ஆட்சி அமைவது உறுதி
     என்றார்.
     இக் கூட்டத்தில் மதுராந்தகம், உத்தரமேரூர் தேமுதிக வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார். இதேபோல் சோழிங்கநல்லூரிலும் விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார். இப் பிரசாரக் கூட்டத்தில் தேமுதிக, மக்கள் நலக் கூட்டணியைச் சேர்ந்த தொண்டர்கள் பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai